உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல்

ஒப்பிப் பூனை வந்தால்

ஓடிப் போகும் நொந்தே.

சோம்பல் பூனை உண்டு; சொல்லும் எலிகள் அண்டி

வீம்பு செய்தும் தூங்கும்! விடியா மூஞ்சிப் பூனை!

39. நாய்

நாயைப் பார்ப்பாய் தம்பி - அதன்

நாவைப் பார்ப்பாய் தம்பி.

சுற்றிச் சுற்றி ஓடும் - அது சொகுசாய்த் துள்ளி ஆடும் வட்டமிட்டே படுக்கும் - அதன் வாலைத் தூக்கி எடுக்கும்!

முன்னங் காலை நிறுத்தி - அதன் பின்னங் காலை மடக்கி,

சின்ன காதை நிமிர்த்தி - அது செய்யும் அழகோ உயர்த்தி!

வீட்டை நன்றாய்க் காக்கும் - அது

வீர வாழ்வை ஊக்கும்;

கோட்டைக் குள்ளே நின்றும் - அது

குரைக்கும் நாயைக் கண்டால்.

இனத்தை எதிர்க்கும் இழிமை - அதன்

இயற்கை யான தென்னே?

இனத்தை விட்டுப் பிரித்தே - நாம்

இறுக்கி வைத்த தாமோ?

40. கழுதை

பொறுமை யான கழுதை - துணிப்

பொதி சுமக்கும் கழுதை.

21