உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

அழுக்குத் துணியும் சுமக்கும் - நல்ல

வெளுப்புத் துணியும் சுமக்கும்

ஏழை துணியும் சுமக்கும் - நல்ல

செல்வர் துணியும் சுமக்கும் - பொறுமை

அழுக்குத் தணியும் தின்னும் - நல்ல வெளுப்புத் துணியும் தின்னும்;

ஏழை துணியும் தின்னும் - நல்ல

செல்வர் துணியும் தின்னும் - பொறுமை

வைத்த சுமையைத் தாங்கும்;

வைத்த அடியும் தாங்கும்;

வைத்த தீனி தின்னும்;

வைத்த நீரும் குடிக்கும் - பொறுமை

பொறுமை யான எண்ணம் - மிகப் பொதுமை யான செய்கை

வெறுப்போ விருப்போ இல்லை - இந்த

வெள்ளி மூக்கன் வாழ்வில் - பொறுமை

பூங்கா வுக்குப் போகலாம்,

41. பூங்கா

பூரிப் பாகப் பார்க்கலாம்!

ஓங்கும் இன்பம் கொள்ளலாம்,

உரிமை யாகச் செல்லலாம்!

வண்ண வண்ணச் செடிகளும்,

வனப்பு மிக்க கொடிகளும்,

எண்ண முடியாப் பூக்களும்,

இருந்த படியே நோக்கலாம்!

பச்சைப் புல்லைக் காணலாம்,

படரும் பந்தல் காணலாம்,

இச்சை வண்டின் இசையினை

இனிதாய்க் கேட்டு மகிழலாம்!