உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல்

பூவைப் பறித்தல் ஆகாது;

புல்லை மிதித்தல் கூடாது;

காவை நம்தம் உடைமையாய்க்

காத்தல் என்றும் கடமையே.

42. எத்தனை அழகு நிலவினிலே

எத்தனை அழகு நிலவினிலே

ஏதும் இல்லை செலவினிலே!

மூத்த இயற்கை நரைப்புருவம் முழுத்த மதியின் பிறையுருவம்!

மூன்றாம் பிறைதான் ஒளிவில்லே மோதல் இல்லாக் களிவில்லே!

பிறந்த குழந்தை இப்பிறைதான் பின்னர் வளரும் முத்திரைதான்!

எட்டாம் பிறையாம் ஒருபாதி வெள்ளி யோடச் சரிபாதி!

முழுத்த மதியில் நிறைகூடின்

முதிர்ந்த தேங்காய் அரைமூடி!

- (எத்தனை.)

43. பழகு

ஓடுப் பழகு தங்காய் - நீ

ஓடும் போதே நன்றாய்க்

கூடப் பழகு தங்காய் - நண்பாய்க்

கூடப் பழகு தங்காய்!

ஆடப் பழகு தங்காய் - நீ

ஆடும் போதே நன்றாய்ப்

பாடப் பழகு தங்காய் - பண்பாய்ப்

பாடப் பழகு தங்காய்!

23