உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

தேடிப் பழகு தங்காய் - நீ

தேடிப் பழகும் போதே;

தேடப் பழகு தங்காய் - உண்மை

தேடப் பழகு தங்காய்!

மூடிப் பழகு தங்காய் - நீ

மூடிப் பழகும் போதே

மூடப் பழகு தங்காய் – பொய்யை

மூடப் பழகு தங்காய்!

பட்டம் விடுதம்பி - நீ

44. திட்டமிடு

பட்டம் விடு!

பட்டம் விடும் போதே - நீ

பட்டம் பெறத்

திட்டமிடு தம்பி - நீ

திட்டமிடு

திட்டமிடு தம்பி - நீ

திட்டமிடு!

பட்டம் பெறும் போதே - நீ

பட்டொளி செய்யத்

திட்டமிடு தம்பி - நீ

திட்டமிடு!

திட்டமிடு தம்பி - நீ

திட்டமிடு!

பட்டொளி செய்யும் போதே - நீ

பட்டய மாகத்

திட்டமிடு தம்பி - நீ

திட்டமிடு!