உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல்

45. வாழுவதற்கே வள்ளுவம்

பேசு தற்கோ சந்தனம்,

பூசு தற்கோ சந்தனம்?

பேணு தற்கோ அணிகலம், பூணு தற்கோ அணிகலம்?

காட்டு தற்கோ வீணையும்,

25

மீட்டு தற்கோ வீணையும்?

எண்ணு தற்கோ ஊண்வகை, உண்ணு தற்கோ ஊண்வகை?

- சூழு தற்கோ வள்ளுவம் வாழு தற்கே வள்ளுவம்!

கடிக்கவோ - சாறு

குடிக்கவோ - கரும்பு

கடிக்க வோ - சாறு

குடிக்க வோ?

தூற்றவோ - மானம்

போற்றவோ - உடை

46. குறள்

தூற்றவோ - மானம்

போற்றவோ?

படிக்கவோ - கடைப்

பிடிக்கவோ - குறள்

படிக்கவோ - கடைப்

பிடிக்கவோ?

47. FTITIO

தேரடி எல்லாம் சுற்றிவரத்

தேர்ந்த அடிகள் எத்தனை - குழந்தாய்