உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

தேர்ந்த அடிகள் எத்தனை?

ஈரடி தானே குழந்தாய்

திருக்குறள் ஈரடி தானே!

ஊரடி எல்லாம் ஊர்ந்துவரத்

தேர்ந்த அடிகள் எத்தனை - குழந்தாய் தேர்ந்த அடிகள் எத்தனை?

ஈரடி தானே குழந்தாய்

திருக்குறள் ஈரடி தானே!

பாரடி எல்லாம் படர்ந்துவரத்

தேர்ந்த அடிகள் எத்தனை - குழந்தாய்

தேர்ந்த அடிகள் எத்தனை?

ஈரடி தானே குழந்தாய்

திருக்குறள் ஈரடி தானே!

சீரடி யாலே செழுமையுறச்

கேரும் அடிகள் எத்தனை குழந்தாய்

சேரும் அடிகள் எத்தனை?

ஈரடி தானே குழந்தாய்

திருக்குறள் ஈரடி தானே!

பட்ட மரமும் அழகாகும்

48. அழகு

பாலை வெளியும் அழகாகும்

கொட்டும் மழையும் அழகாகும் கொண்ட உணர்வே அழகன்றோ!

தீயும் தெய்வ அழகாகும் தேளும் பார்க்க அழகாகும்

நாயும் இனிய அழகாகும் நயக்கும் உணர்வே அழகன்றோ!

புல்லில் அழகு பொருந்தாதோ? புலியில் அழகு பேசாதோ?