உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல்

புல்வாய் மானின் அழகென்னே! பொருந்தும் உணர்வே அழகன்றோ!

தாழை மடலின் பூவினிலே

தழைக்கும் மழலை நாவினிலே

வாழை தென்னைக் காவினிலே

வாழும் உணர்வே அழகன்றோ!

49. முப்பழம் - மூவினம்

முப்ப ழங்கள் அறிவீரா?

மூவி னங்கள் அறிவீரே!

முப்ப ழங்கள் வாழைமா முட்டு பலாவாம் பேரினவே! மூவி னங்கள் மெல்லினமே முந்தும் இடையே வல்லினமே!

முப்ப ழங்கள் சுவையினவே மூன்று வகையாம் சுவையினவே;

மூவி னம்மும் இனியனவே

மூவ கையாம் இனியனவே!

முப்ப ழங்கள் சுவைத்திடவே முயற்சி யளவை அறிவீரே, மூவி னங்கள் ஒலித்திடவே முயற்சி அளவை அறிவீரே!

50. கடலும் வானும்

கண்ணுக் கெட்டாக் கடலோடு

காணும் வானம் கைகோத்தல்

விண்ணும் மண்ணும் இணைவதனை

விளக்கும் காட்சி யாமன்றோ!

நீரின் நீல நிறத்தோடு

நீல வானின் நிறஞ்சேர்ந்து

27