உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

பாரும் நீலப் பரப்பென்றே

பாரை இணைக்கும் சான்றன்றோ!

நீரை அள்ளி நெடுவானில்

நீளச் சென்று மழையாகிப்

பாரை வளர்க்கும் வளச்செய்தி

பணியால் இணைக்கும் பண்பன்றோ!

மண்ணும் விண்ணும் ஒன்றாகும் மாண்மை மாந்தர் கண்டறிந்து மண்ணு ளேனும் ஒருமையினை மலரச் செய்தல் கடனன்றோ!

51. சோம்பல் உண்டா?

காலைப் பொழுதில் குளிப்பவர்க்குக் கட்டும் உடையைத் துவைப்பவர்க்கு

மாலைப் பொழுதில் நடப்பவர்க்கு மண்டிய சோம்பலும் வந்திடுமோ?

கடமை உணர்ந்த பெரியவர்க்குக்

காலத்தை மேலாய் மதிப்பவர்க்கு

மடமை ஒழிய உழைப்பவர்க்கு

மையலாம் சோம்பலும் வந்திடுமோ?

தொண்டர் பெருமை புகல்பவர்க்குத்

தொண்டில் நிலைத்த மனத்தவர்க்குத்

தொண்டில் முழுகும் செயலினர்க்குத்

தொல்லையாம் சோம்பலும் வந்திடுமோ?

52. பசைபோக்கும் படிப்பு

கரிய கரிய பாசியைக்

கட்டி வைத்த மாலைபோல்

அரிய தவளை முட்டைகள்

அழகாய் நீரில் மிதந்திடும்!