உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல்

29

நீருள் மூழ்கா வண்ணமாய்

நீச்சல் அடிக்கும் மாலைகள்!

வாரிக் கொள்ள முடியாமல்

வழுக்கிச் செல்லும் மாலைகள்!

மாலை எங்கே போயதோ? மாறி மாறிப் பார்க்கிறேன்! வாலும் தலையும் வாய்த்தவை,

வருதல் கண்டு மகிழ்கிறேன்!

சிலநாட் செல்லப் பார்க்கிறேன்

சேர்ந்த வாலைக் காணாமல்

பலநாள் எண்ணி வியக்கிறேன்

பயிற்றும் கருத்தை நயக்கிறேன்!

உணர்ச்சி இல்லாப் பருவத்தில்

ஒட்டுப் பசைபோல் வாழ்ந்தாலும்

இணங்கும் இளமைப் பருவத்தில்

இனிதாய்ச் செருக்கித் திரிந்தாலும்

உயர்ச்சி பெற்றால் பசைபோகும்

முதிர்ச்சி பெற்றால் செருக்கோடும்

உயர்ந்த இவற்றைப் பயிற்றற்கே உலகில் தவளை உள்ளனவோ!

53. போற்றும் வாழ்வு

பூவால் அறிவோம் சிரிப்பினையே;

புகலும் வண்டால் பாட்டறிவோம்;

ஓவா திணைந்து மரத்தோடும்,

ஒன்றும் கொடியால் பணிவறிவோம்!

காற்றால் மென்மை நலமறிவோம்;

கலக்கும் பாலோ டுயர்நீரால்

போற்ற இணைந்து பிரியாத

புகழ்சால் நட்பின் இயலறிவோம்!