உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

கதிரின் வரவால் விழிப்புறக்கக்

கடமை அறிந்து தெளிந்திடுவோம்;

அதிரும் மழையின் துளிப்பெருக்கால்

அன்பால் கூடும் செறிவறிவோம்!

அரைபட் டுளையும் சந்தனத்தால்

அயலார்க் குதவும் நயமறிவோம்!

புரையற் றோங்கும் ஆசானால்,

பொலியும் கல்வித் தகவறிவோம்!

பெரியர் வரலாற் றுணர்வாலே

பெயரா வாழ்க்கைச் சீரறிவோம்!

உரிய இன்பு துன்புகளால்

உண்மை உணர்வை மிகுத்திடுவோம்!

காண்போம் கற்போம் சிந்திப்போம்

கனிந்த பண்பால் அரியவற்றைப்

பூண்போம் வாழ்வோம் புவிக்காக! போற்றும் வாழ்க்கை இவையன்றோ!

காளி கூடைத் தக்காளி;

54. தக்காளி

கனிந்து போன தக்காளி;

வள்ளி கூடைத் தக்காளி;

வாடிப் போன தக்காளி;

பேச்சி கூடைத் தக்காளி; பிஞ்சுப் பிஞ்சுத் தக்காளி; அழகி கூடைத் தக்காளி;

அழுகிப் போன தக்காளி;

வேண்டா இந்தத் தக்காளி என்று நடக்கத் தொடங்கினேன்!

நல்ல நல்ல தக்காளி

நான்கு பேரும் குவிக்கிறார்

என்ன அழகு வாணிகம்!

ஏனாம் இந்த ஏமாற்றே?