உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல் 55. மலர்

உள்ளங் கவரும் மலரே

உன்னைப் போன்றோர் சிலரே

கள்ளம் இல்லா மனமே

காட்டும் உன்றன் இனமே

வெள்ள மாக மலர்கள்

விரிந்து மேலே மலர்ந்தும்

உள்ளங் கொள்ளார் நிலையோ

உதிரப் போகும் இலையே!

56. இரண்டு வாய்கள்

உள்ளே கொள்ளும் வாய்வேறே

வெளியே தள்ளும் வாய்வேறே;

உள்ளும் வெளியும் ஒருவாயாய்

இருந்தால் சீசீ இழிவன்றோ?

சாலை யோரம் இருக்கின்றான் சார்ந்து வெளிக்கும் இருக்கின்றான்; சாலை யோரம் படுக்கின்றான் சார்ந்து சிறுநீர் விடுகின்றான்;

நடக்க உள்ள சாலையிலே நடக்க மாட்டான் ஓரத்தே; நடுவே நடப்பான் எருமையென

நல்ல பிறவி அய்யய்யா!

66

57. எப்படி நிரப்புவது?

“அன்புறு மக்காள்! உங்கள்

அறைகளை நிரப்பி வைத்தால்

இன்றிவண் மீண்டும் எய்தி,

இன்புறக் காண்பன்” என்று,

31