உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

சென்றனர் தந்தை; அந்தச்

சிறுவரோ உவகை கொண்டு

நன்றென நிரப்ப லானார்,

நயத்தகு தந்தை காண.

உந்திய உணர்ச்சி தள்ள

உவகையால் மீண்ட தந்தை முந்திய மைந்தன் வைக்கோல்

முழுப்படப் படைத்து வைத்து

வந்தவர் தலையும் நீட்டா

வகைபெற நிரப்பி யுள்ள புந்தியைக் கண்டு நொந்தார்;

பொருக்கென அகன்று போனார்!

உட்புகும் போதே உள்ளம்

உவந்திட இளவல் இல்லில்

பட்டொளி விளக்கி னோடு

பத்திகள் எரியக் கண்டார்;

ஒட்டிய இடத்தில் தூய

உள்ளொளி நூல்கள் கண்டார்;

மட்டிலா மகிழ்வால் தந்தை

மைந்தனை அணைத்துக் கொண்டார்.

ஒளியினால் நிரப்பக் கூடும்

ஒருபெரும் வைக்கோற் போரால்

வெளியெதும் இல்லா வாறு

வீடெலாம் அடைக்கக் கூடும்;

உளநிலை போன்றே அன்னார்

உரையோடு செயலு மாகும்

தெளிவுறக் கண்டேன் என்று

திருத்தமாய் உரைத்தார் தந்தை.

58. எங்கள் கறவை மாடு

எங்கள் கறவை மாடோர்

ஏற்ற மிக்க மாடாம்.