உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல்

33

இன்று வந்த தில்லை

நேற்று வந்த தில்லை

என்று வந்த தென்றே

எவரும் கண்டார் இல்லை - (எங்கள்)

புல்லைத் தின்னா மாடு

புனலைப் பருகா மாடு

நெல்லின் பயிரைக் கண்டும்

நேராய்ச் செல்லும் மாடு - (எங்கள்)

வாயும் வயிறும் இல்லை

வாலும் தலையும் இல்லை

ஏய கால்கள் இல்லை

எனினும் தாவி ஓடும் - (எங்கள்)

பெரிய மடியாய்த் தோன்றும்

பிறகு பிறகு தேயும்

உருவ மற்றும் போகும்

உடனே வளர்ந்தும் காணும் - (எங்கள்)

கொட்டும் பாலோ வெள்ளம்

கொள்ளை கொள்ளை வெள்ளம்

கட்டிக் காக்க ஆவல்

கையால் ஆக வில்லை - (எங்கள்)

குடத்தில் பிடித்துப் பார்த்தும்

கொஞ்சங் கூடக் காணோம்

தொடுத்துப் பிடித்துச் சேர்த்தும்

துளியும் நிற்க வில்லை - (எங்கள்)

கயிறு மத்துப் போட்டுக்

கடைந்தெ டுப்ப தெங்கே

தயிரும் மோரும் நெய்யும்

தாவிக் குடிப்ப தெங்கே - (எங்கள்)

மாடு நல்ல மாடு

மண்ணில் நடவா மாடு