உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

வீடு வாயில் விட்டு

விண்ணில் ஓடும் மாடு - (எங்கள்)

கண்ணால் காணும் ஆவல்

கனிந்து விட்ட தென்றால்

விண்ணை நோக்கிக் காண்பேன்

வெண்ணி லாவே பேராம் - (எங்கள்)

59. மூக்கு வளையம்

காக்கை ஒன்று வந்ததுவே

காகா ஒலியோ வந்திலதே மூக்கைக் கூர்ந்து பார்த்திடவே மூடு வளையம் இருந்ததுவே!

எவரோ ஒருவர் பிடித்திதனை இரக்க மின்றி வளையத்தை அவருக் கினிதாய்ப் போட்டுள்ளார் அதற்குத் துன்ப அளவுண்டோ?

நீரும் உணவும் கொள்ளாமல் நெடிய ஒலியும் செய்யாமல்

சேரும் உறவும் வெறுத்துவிடச்

செய்தல் என்ன இன்பாமோ?

அறியாத் தவறோ இத்தவறே?

அறிந்தே செய்யும் தவறன்றோ!

அறிந்த ஒருவர் வளையத்தை

அகற்றா விட்டால் என்னாகும்?

காக்கை எதுவும் கழற்றிடுமோ?

கழன்று தானே வீழ்ந்திடுமோ?

நோக்கம் என்ன, நோவாக்க?

நொண்டி யுள்ளச் செயலன்றோ!

பறவை போலப் பறந்திடவே,

பார்த்த உள்ளம் மேலேறக்,