உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல்

கறவைக் காம்பை அறுப்பான்போல்

கயவன் இதனைச் செய்தானே!

பறக்கும் உள்ளப் பண்பாளன் பறவை இதன்தன் வளையத்தைத்

துறக்கச் செய்ய வாயாதா?

துடிப்பும் நீங்கி ஓயாதா?

60. பறக்கும் தட்டு

வெள்ளித் தட்டைத் தூக்கி

வீசி விட்டது பிள்ளை;

வெள்ளித் தட்டும் ஓடி

வீதி யிற்போய் வீழ்ந்தது!

வெள்ளித் தட்டைத் தேடி

வீட்டுள் கொண்டு வந்தேன்

பிள்ளை தூக்கி எறியப்

பின்னும் என்ன செய்குவேன்?

மாலை தொடுக்கு மாறு

மல்லி கைப்பூ வைத்தேன்

காலால் எற்றி விட்டது

கண்ட பக்கம் எல்லாம்.

பூவைச் சேர்த்து வைத்தேன்

பொறுமி அழுது கொண்டே

தாவி எற்றி விட்டது

தளர்ந்தேன் என்ன செய்குவேன்?

வெள்ளித் தட்டை மறைத்தேன்

மல்லி கைப்பூ மறைத்தேன்

உள்ள சினமும் ஓங்கி

ஓயா தழுது புரண்டது.

“தட்டும் பூவும் எங்கே?

தருக இப்போ” தென்றது

“விட்டெ றிந்த பின்னும்” வீட்டுள் வருமோ" என்றே,

35