உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

விண்ணைச் சுட்டிக் காட்டினேன்

விரிந்த மதியும் மீனும் கண்ணைச் சிமிட்டிக் காட்டின கடிய சீற்றம் பறந்தது.

“சீற்றத் தாலே எறிந்தனை

சீற்றத் தாலே போயது

சீற்றம் நீங்கி விட்டால்,

சீற்றம் நீங்கி வந்திடும்"

என்று சொன்னேன் "பறந்தவை

என்று வருமோ?” என்றது.

"சென்று பார்ப்போம் வீட்டுள்

சேர்ந்தி ருக்கும்” என்றேன்.

61. வேலை கெட்ட வேலை

வெளுத்த வானம் கறுத்தது;

கறுத்த வானம் நெரித்தது;

நெரித்த லாலே இடித்தது;

இடிக்க மின்னல் அடித்தது; இடியைக் கேட்டுத் துடித்தது; ஒளியைப் பார்த்துப் படுத்தது; விடிந்த பொழுதில் தாயிடம் விரும்பிக் குழந்தை சொன்னது:

வானத் துள்ளோர் கெட்டவர் வாய்த்த உடலைச் சாய்க்கடைச்

சேற்றில் புரட்டிக் கறுக்கிறார்;

சேர்ந்து வாழ மறுக்கிறார்;

வாளால் வீசிச் சாடுறார்; வலிய இரைச்சல் போடுறார்; கனத்த சண்டை முடிந்தபின் கண்ணீர் வடித்துக் கிடக்கிறார்; காலைப் பொழுதில் அமைதியாம்;