உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல்

மாலைப் பொழுதில் சண்டையாம்;

வேண்டா அம்மா வேண்டாவே

வேலை கெட்ட வேலையே!

62. தேளைக் கடிப்பேன்

கிட்டு பெரிய பேச்சாளி;

கிடுகிடுப் பேச்சால் திணறவைப்பான்;

சுட்டுத் தள்வேன் கொக்கென்பான்

சோடி யாக விழுமென்பான்!

காட்டில் செல்ல யானஞ்சேன்

கரடி புலிக்கும் யானஞ்சேன்

வேட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டால்

வீரிட் டோடும் அவையென்பான்.

பயந்தான் கொள்ளிப் பயல்களுக்கே

பாம்புப் பதற்றம் உண்டென்பான்

வியந்து வியந்து மகிழ்ந்திடுவான் வெற்றிச் சிரிப்புச் சிரித்திடுவான்.

உண்ணா விடினும் ஒருவேளை

உறக்கம் வருமாம் கிட்டுவுக்கே! பண்ணாய்த் தன்னைப் புகழானேல்

பாவம்! உறக்கம் கொள்ளானே!

குப்பன் ஒருநாள் அகப்பட்டான்

கூறி மகிழத் தொடங்கிவிட்டான்

“அப்பா! அப்பா! பார்த்திடுவாய்; அலறும் புலியாம் இதுகண்டாய்!

பார்த்தே நடுங்கும் பயந்தானே

பாரிதன் வாய்க்குள் என் தலையைச்

சேர்த்தே மீண்டும் எடுத்திடுவேன்

செய்யத் திறமை உனக்குண்டோ?”

என்றே நகைத்து மெதுவாக

இருகை யாலும் புலிவாயை

37