உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

நன்றாய்த் திறந்து தலைநுழைத்தான்

நடுங்கும் குப்பன் வியப்புற்றான்.

வாய்க்குள் தலையை நுழைத்ததுமே ஐயோ ஐயோ என்றலறிப் பாய்ந்து விழுந்து புரண்டழுதான் பயந்த குப்பன் ‘என்' என்றான்!

"ஏதோ ஒன்று கடித்ததடா! ஏறி ஏறித் துடிக்குதடா! யாதோ செய்வேன் எரியுதடா!

ஐயோ தலையைப் பிடித்திடடா?

வைக்கோல் திணித்த புலித்தலையால் வன்மை காட்ட நினையழைத்தேன்;

மிக்க பெருந்தேள் உள்ளிருந்தே மேற்கா தருகில் பிடுங்கியதே! என்ன செய்வேன்?” எனக்குப்பன்: “ஏட கிட்டு வாய்ப்பன்றோ முன்னர்ச் சொன்ன பொய்யோடும் கடிப்பேன் தேளென்”றுரை யென்றான்!

63. பிழைகள் அகல

களைகள் இலையேல் விளைவு சிறக்கும்; பிழைகள் இலையேல் பெருகும் மதிப்பெண்;

அளவாய் எழுதுதல் ஆராய்ந் தெழுதுதல் தெளிவும் திருத்தமும் திகழ எழுதுதல் முறையாய்ப் பேணின் நிறையும் மதிப்பெண்; மனனப் பகுதியில் தனிப்பெருந் திறமும்

இலக்கணப் பகுதியில் இணையிலாப் பயிற்சியும்

ஏய்ந்திட லாயின் எட்டிய நூறும்

வாய்ந்திடும் மதிப்பெண் இவற்றை

ஆய்ந்துநீர் காண்மின் அயர்வறச் சிறந்தே!