உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல் 64. IITB

ஓட்டை யான குடத்திலே - நீர்

ஒற்றைச் சொட்டும் நிற்குமோ?

ஓட்டை யான படகிலே - அதன் ஓட்டி தானும் பிழைப்பானோ?

குடத்தின் ஓட்டை போலவும் - அப் படகின் ஓட்டை போலவும்

தொடங்கும் ஒட்டை நாட்டிலே - பெருந்

தொல்லை தொல்லை ஆகுமே!

நாட்டைக் கெடுக்கும் பல்குழு - மிக நயமாய்க் கெடுக்கும் உட்பகை

கூட்டாய் அழிக்கும் குறும்புகள் - இவை

கொண்ட நாடு வாழுமோ?

மக்க ளுக்காய் ஆட்சியும் - அவ்

வாட்சிக் காக மக்களும்

ஒக்க வாழும் நாடதே - என்றும்

ஓங்கி வாழும் நாடதாம்.

65. தம்பி கேள்

மண்ணை விண்ணுக் கொப்பென

மாற்றும் தூயன் வள்ளுவன்

வண்மை நூலைத் தம்பியே

வாழ்க்கைப் பேறாய்க் கொள்ளுவாய்!

சேரன் தம்பி செய்ததாம்

செஞ்சி லம்பைக் கற்றிட

வீரத் தம்பி ஆர்வமாய்

வேட்கை கொள்வாய் வாய்ப்பிதே!

சாத்தன் தந்த மேகலை

சால்பு மிக்க மேகலை

39