உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

ஈத்து வாழும் இன்பினை

ஏற்று வாழ ஆய்குவாய்!

தேவர் தந்த மாமணி

தேனை நேர்சிந் தாமணி யாவர் நெஞ்சும் அள்ளுமே

நாமும் கொள்வோம் தம்பியே!

கம்பன் தந்த காவியம்

கட்டிப் பாகாம் காவியம்

தம்பி தம்பி ஆவலாய்த்

தள்ளா தென்றும் கொள்ளுவாய்.

பத்துப் பாட்டும் பாட்டல்ல

பண்டைப் பாட்டர் பேரர்க்கு

வைத்த சொத்தாய் எண்ணுவாய்

வையம் வாழ வாழுவாய்.

சங்கம் தந்த எண்தொகை

சான்றோர் தேடித் தந்ததாம்

தங்கப் பேழை ஆர்வமாய்த் தாங்கு தம்பி மேம்பட.

நந்தம் மாண்பைப் பாரிலே

நாட்டு நற்றொல் காப்பியம்

சிந்தை கூர்ந்து மூச்சொடும்

சேரக் காத்து வாழுவாய்.

ஞாலம் உய்ய நல்லுரை

நாட்டிச் சென்றோர் நூல்களே

கால மாரி ஆவதாம்

கண்டு வாழ்வாய் தம்பியே!

தாயைக் காக்கும் சேயெனும்

தாழாப் பேறு தாங்குவாய்

ஏய வாழ்வில் அன்னையை ஏற்றி வைத்தே வாழுவாய்.