உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல் 66. தமிழ்

தமிழே இனிய உயிராகும் - அத்

தமிழே வாழ்வுப் பயிராகும்.

தமிழே சுவையாம் நீராகும் - அத்

தமிழே வளமாம் சோறாகும்.

தமிழே பாகுச் சுவையாகும் - அத் தமிழே அறிவுக் குவையாகும்.

தமிழே விரும்பும் விருந்தாகும் - அத்

தமிழே பிணியின் மருந்தாகும்.

தமிழே பண்பின் அணியாகும் - அத்

தமிழே மானத் துணியாகும்.

தமிழே விளைவின் நிலமாகும் - அத்

தமிழே உயிரின் நலமாகும்.

தமிழே அருவி ஒழுக்காகும் - அத்

தமிழே அமிழ்த முழுக்காகும்.

தமிழே ஒளியின் பிறப்பாகும் - அத்

தமிழே உணர்வின் சிறப்பாகும்.

தமிழே தமிழே தானாகும் - அத்

தமிழே வற்றாத் தேனாகும்.

தமிழே தமிழே தானாவான் - அத்

தமிழால் தமிழர் தேனாவான்.

67. அன்பு

பாலும் தேனும் கலந்ததுவோ? பாகும் பருப்பும் இணைந்ததுவோ? தோலும் துளைக்கும் குளிராகித் தொல்லை நீக்கும் அன்பிணைவே!

41