உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

அன்பால் வாழும் வாழ்வதுவே,

அமுதாய் வாழும் வாழ்வாமே!

முன்னும் பின்னும் காணரிய

முதிர்ந்த இறையே அன்பாமே!

அன்பை இல்லார் உயிரில்லார்

அன்பை இல்லார் உறவில்லார் அன்பை இல்லார்க் கிருப்பவைதாம்

அவரே இல்லை எவை இருக்கும்?

68. காலைக் காட்சி

கோழிக் குரலும் எழுந்ததம்மா - மனம் கூசும் இருளும் மறைந்ததம்மா வாழி யுரைக்கும் பறவையம்மா - அதை வணக்கம் புரிந்திட வந்திடம்மா.

காலை மலரும் மலர்ந்ததம்மா - அதைக் கண்டிடும் பேறும் கிடைத்ததம்மா மேலைப் பழவினை மாய்ந்ததம்மா - மக்கள் மேம்பட நல்வினை செய்திடுவாய்.

பறவை ஒலியும் எழுந்ததம்மா - அதன்

பண்ணொலி பாடலைப் போன்றதம்மா

கறவை வருந்தி அழைக்குதம்மா - அதன் கன்றுக் கமுதம் வழங்கிடவே.

வான முகட்டைக் கிழித்ததுபோல் - பெரும் வைய வழியைத் திறந்ததுபோல் கான நெருப்புப் பிழம்பதுபோல் - கதிர்

காட்டும் புதுமை தெரிந்திடுவாய்.

தங்கத் தகடு நகர்வதுபோல் - கதிர்

தானே விரைந்து நகர்வதுபார்

பொங்கும் கடலில் பிறந்திருந்தால் - அது

பொலியும் வெம்மைப் பிழம்பாமோ?