உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல் தங்கத்தைக் காய்ச்சி வடித்திடவே - அங்கே

தனிப்பெருங் கொல்லரும் உள்ளனரோ எங்கணும் பார்த்து மகிழ்ந்ததுண்டோ - இந்த ஏரியைப் போலொரு தங்கவேரி!

நீலக் கடல்நீர்ப் பரப்பதிலே - இந்த

G

நீளக் கலைக்கதிர் பட்டதனால் கோலக் கடலாகிக் காணுதம்மா - உள்ளம் கொள்ளைக் கடலில் குவியுதம்மா!

மெல்லக் கதிரும் எழுந்தவுடன் - கரு மேகத் திரையும் சுருளுதம்மா நல்லவெண் வெள்ளி உருக்கதுபோல் - கடல் நாவுறப் பேசிடத் தோணுதம்மா!

69. பருவமாற்றம்

வேப்பங் காயோ கசப்பாகும்

வேம்பும் பழுத்தால் இனிப்பாகும்;

மாங்காய் பிஞ்சில் புளிப்பாகும்

மாவே பழுத்தால் இனிப்பாகும். வாழைக் காயோ துவர்ப்பாகும் வகையாய்ப் பழுத்தால் இனிப்பாகும் பருவம் வழங்கும் கொடைகளிவை

பார்க்கப் பலவும் தெளிவாமே!

70. உடல்நலம்

வேப்பி லையைத் தின்னலாம்;

விரும்பித் துளசி தின்னலாம்;

காப்ப தவையே உடல்நலம்;

கருதித் தின்றால் கெடவில்லை!

பாகற் காயோ கசப்புத்தான்;

பழகிப் போனால் சுவைப்புத்தான்;

நாவுக் காக வாழாமை

நலத்துக் கான வாழ்வாமே.

43