உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

சோற்றுக் காக வாழ்வதோ?

சுவையைக் கருதி வாழ்வதோ?

கூற்றை வெல்லும் ஆற்றலைக்

கொள்ள லாகும் 'நா’ காத்தல்!

நாவுச் சுவையை விரும்புதல்

நாளும் நோய்க்கே விரும்புதல்;

கூவி மகிழ வேண்டினால்

கொஞ்சம் அடக்கு நாவையே!

71. கண்ணைக் காத்தல்

கண்ணைக் கழுவு குழந்தாய்;

கதிரை நோக்கு குழந்தாய்;

கண்ணில் ஒளியோ பெருகும்;

காட்சி எல்லாம் விரியும்!

காலை மாலை கதிரைக்

கண்டு நீரால் கழுவல்,

வேலை யாகக் கொண்டால்

வேண்டாம் கண்ணுக் காடி!

ஆடி ஆடி நீரில்,

அழகுக் கதிரைக் காணின்,

ஓடிப் போகும் கண்ணோய்

உண்மை அறிந்து கொள்வாய்.

தொடர்ந்து படிக்கக் கண்ணைத் துலக்க மாகக் கழுவு; தொடரும் வெப்பம் குன்றும் தூய்மை குளுமை ஒன்றும்!

நீரில் குளித்த பின்னே,

நீயும் படிக்கத் தொடங்கின்

வேரில் பழுத்த சுளையாய்

வேண்டும் கல்வி சுவையாம்!