உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல்

45

72.

தாத்தா

செல்வம் சேர்த்த தாத்தா;

செழுமை சேர்த்த தாத்தா;

கல்வி பெற்ற தாத்தா;

கனிவு மிக்க தாத்தா.

ஊருக் குதவு தாத்தா;

உழைப்பு மிக்க தாத்தா;

யாருக் கேனும் நன்மை

ஆய்ந்து செய்யும் தாத்தா.

உலகம் வாழ எண்ணும் உயர்வு மிக்க தாத்தா;

கலகம் அறியாத் தாத்தா;

கருணை மிக்க தாத்தா

எங்கள் தாத்தா போல,

எவர்க்கும் தாத்தா இருந்தால்,

பொங்கும் இன்ப உலகம்

புவியே ஆகும் உண்மை!

73. பாட்டி

பாட்டி எங்கள் பாட்டி,

பாடு பட்ட பாட்டி;

கூட்டுக் குடியில் இருந்து,

குணத்தில் உயர்ந்த பாட்டி.

கதையும் பாட்டும் பாட்டி

கட்டிக் கட்டிச் சொல்வார்;

விதையும் விளைவும் போல விரும்பு மாறே செய்வார்.

பாட்டி சொன்ன எல்லாம்

எழுதி வைத்தி ருந்தால்,

ஏட்டை வண்டி அளவாய்

ஏற்ற வேண்டி இருக்கும்!