உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

பாட்டி மட்டும் கொஞ்சம்

எழுதப் படித்தி ருந்தால், பாட்டி ஔவை அவர்தாம்

பாடிப் போற்றும் உலகே!

அப்பா எங்கள் அப்பா,

74. அப்பா

அருமை யான அப்பா;

ஒப்பில் லாத அப்பா;

ஒழுங்கு மிக்க அப்பா.

கடமை தவறா அப்பா;

காலம் தவறா அப்பா;

மடமை அறியா அப்பா;

மதிப்பிற் சிறந்த அப்பா.

கண்ணைக் காத்தல் போலக்

கருதிக் குடும்பம் காப்பார்;

எண்ணி எழுதிக் கணக்காய்,

என்றும் செலவு செய்வார்.

கல்வி தந்த அப்பா;

கண்ணைத் திறந்த அப்பா;

நல்ல வாழ்வு தந்த

நன்றிக் குரிய அப்பா!

75. அம்மா

எங்கள் அம்மா போல

எவர்க்கு வாய்த்தார் அம்மா?

தங்க மான அம்மா;

தவத்தால் பெற்ற அம்மா!

பொங்கல் மனையைப் போலப்

பொலியும் என்றும் மனையே!

எங்க ளுக்குக் கவலை,