உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல்

47

என்றும் இருந்த தில்லை

'வேண்டும்' என்று நாங்கள், வேண்டு முன்னர் அவரே வேண்டு கின்ற வற்றை

விரும்பி விரும்பிச் செய்வார்!

அம்மா என்றால் அம்மா;

அருமை ஆசான் அம்மா;

கொம்புத் தேனைப் போலக்,

குளிரப் பேசும் அம்மா!

வம்பு செய்த போதும்

வன்மை காட்டா அம்மா;

தெம்பு மிக்க அம்மா;

தெய்வ மான அம்மா.

76. அண்ணன்

எங்கள் அருமை அண்ணன்,

என்றும் இனிய அண்ணன்;

தங்கை தம்பி மாரைத்

தாங்கிக் காக்கும் அண்ணன்!

அப்பா அம்மா இருவர்

ஆன ஒருவர் அண்ணன்;

தப்பா சரியா சொல்லித்

தட்டிக் கொடுக்கும் அண்ணன்

அடித்த லில்லா அண்ணன்;

அன்பு வடிவாம் அண்ணன்;

படிப்பில் புலியாம் அண்ணன்;

பண்பில் உயர்ந்த அண்ணன்.

சொல்லும் செயலும் ஒன்றாய்ச்

சுடரும் எங்கள் அண்ணன்;

கல்லும் கனிய வைக்கும்