உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல்

கட்டிப் பாகே அவனா? வெண்ணெய் தானா உடலம்

விரும்பி நிற்பார் எவரும்.

சுறுசு றுப்பே தம்பி சுடர்வி எக்கே தம்பி எறும்பும் தோற்கும் அவற்கே

குறும்பும் விரும்பச் செய்வான்.

பொங்கு மதியே தங்கை

79. தங்கை

பொருந்தும் எழிலே தங்கை

எங்கள் தங்கை தமிழே

எங்கள் மூச்சும் அவளே.

கோலம் போடும் அழகைக்

கொஞ்சிப் பார்க்க வைப்பாள்

காலைக் கதிரும் சொக்கிக்

கதிரைப் பரப்பும் அங்கே.

பல்லைப் பார்த்தால் முத்து

பாதம் மலரின் கொத்து

வில்லைப் போலப் புருவம் விரும்பும் அன்பின் உருவம்.

தங்கை இருக்கும் இடத்தில் தவறிக் கூடத் துன்பம் தங்கி இருப்ப தில்லை

தவத்தின் பிறவி அவளே

உறங்கும் முகத்தைக் காணக்

கிறங்க வைக்கும் எழிலே!

இறங்கு காலம் இல்லை

இனிய தங்கை உள்ளாள்.

49