உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

80. உடன்பிறந்தார்

முன்னே பிறந்தான் கண்ணன் முறையால் அவனென் அண்ணன்

பின்னே பிறந்தாள் மங்கை

பேறு பெற்ற தங்கை!

அண்ணன் தங்கை கூட

ஆடிப் பாடி மகிழ்வேன்

கண்ணைப் போல அவர்கள் கலந்து விட்ட உயிர்கள்!

‘கூடப் பிறந்தார்' என்னும்,

கொஞ்சும் பெயரை எண்ணின்,

கூடல் இன்றிச் சண்டை

கொள்ள முறைமை உண்டோ?

81. குட்டிப் பையன் சிரிக்கிறான்

குட்டிப் பையன் தட்டினான்,

எட்டுப் பத்துப் பானைகள்;

தட்டி முட்டி வீழ்ந்தன;

குட்டிப் பையன் சிரிக்கிறான்.

அடுக்க ளைக்குள் போயினான்;

அரிசி மாவை அள்ளியே மடக்கி மடக்கித் தெளிக்கிறான்; மகிழ்ச்சிப் பெருக்கில் சிரிக்கிறான்.

தண்ணீர்க் குடத்தைச் சாய்க்கிறான்; தாளம் போட்டுக் குதிக்கிறான்; எண்ணெய்ப் புட்டி வீசியே எறிந்து பெரிதாய்ச் சிரிக்கிறான். ஐந்து நிமிடம் அவ்வளவே; ஆன வெல்லாம் அலைக்கழிவே; வந்த இழப்பும் உடைப்புமெலாம், வாய்த்த சிரிப்பே அவனுக்கே!