உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

எங்கள் ஆசான் அரியர்;

83. ஆசிரியர்

இனிதில் வாய்த்த பெரியர்; பொங்கும் அறிவின் அருவி;

பொலியும் எங்கள் ஆசான் - (எங்கள்)

ஆனா முதலாய்த் தந்தார்;

ஆகும் கணக்கும் தந்தார்;

தேனாய்ச் சுவைக்க எல்லாம்

திரட்டித் திரட்டித் தந்தார் - (எங்கள்)

காலம் தவற மாட்டார்;

கடமை தவற மாட்டார்;

பாலைப் போல உள்ளம்;

பசியைப் போக்கும் பாடம் - (எங்கள்)

கடுமை யாகப் பேசார்;

கண்டித் தாலும் ஏசார்;

தொடுத லில்லை கம்பு:

தொழிலே தெய்வ அன்பு - (எங்கள்)

எழுத்தைப் பார்த்தால் முத்து;

எங்கள் நலமே சொத்து;

பழுத்த கிழவர் ஆயும்,

பாலர் ஆக வாழ்ந்த - (எங்கள்)

84. உலகம்

பெரிய வட்டை ஒன்றைச்

சிறிய வட்டை சூழ

அமைத்து வைத்த தென்ன

அழகாய் அமைந்த வானம்!

தட்டு மாறி விட்டால்

தவறு யாதும் இல்லை!