உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல்

வானத் தட்டு மாறின்

வைய வாழ்வு என்னாம்?

அழகு மிக்க உலகம்!

அறிந்தால் உண்டோ கலகம்!

85. கோயில்பார்!

கோயில் விரிவு பார்பாப்பா!

கொள்வாய் விரிவும் அதுபோலே!

கோபு ரத்தைப் பார்பாப்பா

கொள்வாய் உயரம் அதுபோலே

இறையை மதித்தல் என்பதுதான் எவரை எனினும் மதிப்பதுவே இறைமைப் பெயரால் சண்டையிடல் இறைக்கே பெரிய இழிவாக்கும்.

பெற்றோர்க் குவகை அவர்தந்த க்

பிள்ளைக் குவகை செய்வதுவே! பெற்றோர்க் குவகை ஆகிடுமோ பிள்ளை களுக்குள் மோதுவதே!

ஆண்டான் ஒருவன் தானென்றால்

அவன்றன் பேரால் மோதுவதேன்

ஈண்டோர் பொருளுக் கெத்தனைபேர்

இருக்கக் காணல் மோதுதற்கோ?

ஒன்றி வாழல் நலமாகும்

ஒன்றாய் வாழல் மிகநலமாம் குன்றாய் நிற்போம் அசையாமல் குணமாய் நிற்போம் இசைவோடே.

53