உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

86. கோயில்

ஊருக் கமைந்த கோயில் உயர்வுக் கெழுந்த கோயில்

யாரும் விரும்பும் கோயில்

நீயும் விரும்பல் கடமை!

கட்டு மானக் கலையா

கல்லில் வடிக்கும் கலையா

நட்டு வாங்கம் இசையா நாடு காண நிற்கும்!

காவல் கோட்டை கோயில்

கருவூ லம்மும் கோயில்

தாவும் நோயை நீக்கத்

தக்க நிலையம் கோயில்!

கோயிற் குள்ளே கேடு

குலவும் என்றால் உடனே

வாயில் புகுந்தே ஒழித்தல்

வாய்த்த கடனாய்ப் புரிவோம்.

கேட்டை நீக்கல் விட்டுக்

கேடே கோயில் என்று கோட்டை விடுதல் குறையாம்

கொள்கை என்னல் கறையாம்.

பாம்பும் தேளும் கண்டு

பாட்டன் வீட்டை விடவோ?

தீம்பு கண்டு தீர்க்கும்

திடத்தைக் கொள்ளல் தீர்வாம்!

87. இறையவனே!

அன்புப் பொருளாம் இறையவனே அருளின் உருவாம் மறையவனே

மின்னல் ஒளியாய் நிறைபவனே