உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 33 ஓடம் விடுவோம்

'என்னை ஏன் உற்றுப் பார்க்கிறாய்?

"என்னவோ தெரியவில்லை; பார்க்கிறேன்!”

'என்னை ஏன் இதனைக் கேட்கிறாய்?"

"என்னவோ தெரியவில்லை; கேட்கிறேன்.

"நல்லதே யாயிற்று;

நாமிருவரும் ஒரே நிலைதான்!

"நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்;

நீ கேட்டுக் கொண்டிரு; உனக்குநான்;

எனக்கு நீ! இதுதான் மெய்யான காதல்! “ஏ! ஏ! ஏ!”

"இது பொருந்தாது என்கிறாயா?

பொருந்திய பெயரை வைத்துக் கொள்!

எனக்கேதும் மறுப்பில்லை!

"உனக்குச் சரியானது அதுதான் என்றால் எனக்குச் சரியானதும் அதுதான்"

"வா, வழிக்கு."

"எங்கே போகலாம்?"

"அதோ மழை நீரில் தனித்தனியாக

ஓடம்விடுகிறார்கள் நம் தோழர்கள்! நாம் சேர்ந்தே ஓடம் விடலாம்!

அப்போ பார்க்கலாம்

"என் கூந்தலைத் தொடாதே!'

"நீ மட்டும் என் குடுமியைத் தொடலாமா?

"குடுமியைத் தொடலாம்;

கூந்தலைத் தொட்டால் அது வேறு மாதிரி"