உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

63

"அம்மா, நீங்களும் தாய்தானே! அவர்களைத் 'தாய்' என்றுகூட ஊர் மதியாமல் போனாலும் போகட்டும்; மிதியாமல் ஆவது இருக்கலாம் அல்லவா!”

சாமியாக இருக்க மாட்டேன்

"நீ சாமி; நான் பூசாரி."

"சரி.

"சாமிக்கு என்னென்ன பிடிக்கும்?"

"அவல் கடலை சுண்டல் முறுக்கு பழம் பால் எல்லாம்

பிடிக்கும்."

"இவ்வளவுக்கும் காசு

(6

""

'என்னிடம் இருக்கிறது.”

"எடு வாங்கலாம்."

"நீ சாமியாக உட்கார்; கண்ணை மூடு; அப்படியே இரு; பார்க்கக் கூடாது; பேசக் கூடாது;”

"அப்படியே இருக்கிறேன் நீ படை.

நீ பாராதே! பேசாதே!"

"எவ்வளவு நேரம் பாராமல் பேசாமல் இருப்பது?"

சாமியாக இருக்குமட்டும் பாராதே பேசாதே.

"சாமிக்குப் படைத்தவை எல்லாம் காணவில்லையே

எங்கே?'

"தின்று விட்டேன்."

"சாமிக்கு இல்லையா?

"சாமிக்குப் படைத்தால் போதும்; அது தின்னாது.

"ஐயையோ! நான் சாமியாக

பூசாரியாகத்தான் இருப்பேன்."

ருக்க மாட்டேன்;