உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

"அப்படியானால் கூந்தலைத் தொடுவேன்"

"தொடக்கூடாது; அதை யாரோதான் தொடலாம்"

65

"தொடுவேன்; அந்த யாரோவாக நான் இருந்து விட்டுப் போகிறேன்

tr

"ஆசையைப் பார்! ஆசையை! தோசை மேல் ஆசை!'

"ஆடி வரட்டும் அடைமழை கூடிவரட்டும் - அப்போது பார்க்கலாம்!"

"இப்போது பார்ப்பது!"

நாம் படியாமல் பேசிக் கொண்டிருப்பதை அம்மா பார்க்கிறார்! முதுகு அப்பளமாகப் போகிறது! படி! படி"

கூடையும் கூடையும்

உயரக் கூடைக்கு உவகை பிறந்தது.

அடுத்தே வந்தது தணிந்த கூடை

முன்னைக் கூடையன் முழுத்த காளை! பின்னைக் கூடையள் பூத்த குமரி!

நெருங்கி நெருங்கி நேயம் கொண்டன.

பலநாள் நெருக்கம் பசுமை யானது.

முட்டும் மோதும் முந்தும் பிந்தும்;

ஒட்டும் உராயும் ஒன்றும் ஒதுங்கும்;

கூடைக் காதல் கொஞ்சி வளர்ந்தது;

குலுங்கி ஆடும் குழைந்து வாடும்

கூடலும் ஊடலும் கொண்டதால் போலும்! தனித்தனிச் சுமையாய்ப் போன கூடைகள்

ஒருநாள் பார்த்தால் திரும்பு காலில்

ஒற்றைக் கூடையாய் ஒடுங்கிக் கொண்டன;

பெரிய கூடையுள் சிறிய கூடை!

அன்று காலைப் பொழுதே

தாலி கட்டு முடிந்த தாமே!