உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

உறவாக்கும் உறை

“என்ன எழுந்த வேலையா?"

"பாலனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன். எழுதியாயிற்று. ஒரு சொட்டுத் தண்ணீர்தான் வேண்டும். 'அஞ்சல் உறை' யை ஒட்டி விடலாம்.

"பசை இருந்தால் ஒட்டிக் கொள்ளத்தானே செய்யும்."

"ஆம்; பசை ஒரு பக்கத்தில் இருந்தாலும் இரண்டு பக்கமும் ஒட்டிக் கொள்கிறது இல்லையா?

“ஆம்!”

"நீ சொல்கிறாயே! அவளிடம் அன்பே இல்லை; அதனால் எங்களால் கூடி வாழமுடியவில்லை என்று; 'உன்னிடமும் அன்பு இல்லை' என்பது தானே பொருள்!

'என்ன சொல்கிறாய்!'

'உண்மையைத்தான் சொல்கிறேன். உறையில் ஒரு பக்கத்தில் இருக்கும் பசையால் இரண்டு பக்கமும் ஒட்டிக் கொள்வதை நாம் கண்ணாரக் காணத்தானே செய்கிறோம்! அப்படி ஒருபக்கமாவது அன்பு இருந்தால் ஒட்டி வாழ உறவாக வாழ முடியும் அல்லவா! காலமெல்லாம் உறை. இதனை உரைத்தும் உணரா மனம் மரத்துப் போய்க் கிடக்கிறதே."

-

-

'நண்பா! இன்னோர் உறையை எடு! உடனே அவளை வரச் சொல்லி அஞ்சல் எழுதுகிறேன்."

அன்பு மை

'முத்து, வயலுக்குக் குப்பை அடிக்கிறாயா"

(4

ஆமா தாத்தா!"

“வண்டி என்ன கீச்சுக் கீச்சென இரைச்சல் போடுகிறது."

"நேற்றே மசகுமை போட்டிருக்க வேண்டும்; மறந்து விட்டேன்; அதனால், இரைச்சல் போடுகிறது தாத்தா."

'அச்சு இரைச்சல் போடுவது மட்டும் இல்லை. இப்படியே போனால் அச்சுத் தேயும்; ஒடியவும் செய்யும்."