உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<<

வானவில்

67

"ஆமாம் தாத்தா, நாளை மறந்து விடாமல் மசகு போட்டு விடுவேன்."

"நல்லது; வண்டிக்கு மறவாமல் மசகு போடு. அப்படியே வாழ்க்கை வண்டிக்கும் மசகு போடு."

‘என்ன தாத்தா சொல்கிறீர்கள்?'

"அதுதான், உன் குடும்பத்துச் சண்டை தெருவுக்கு வந்து, ஊர்க்கூட்டத்தில் வந்து நிற்கிறதே அதைச் சொன்னேன். ஊர் சிரிக்காமல் இருக்க - உங்களுக்குள் பிரிவு இல்லாமல் இருக்க - அன்பு என்னும் மசகைக் கொஞ்சம் போடு' குடும்ப வண்டியின் அச்சு ஒடியாமல் ருக்க வேண்டும் பார்; அதற்காகத்தான்.

"தாத்தா! நீங்கள் நன்றாக இருக் வேண்டும் தாத்தா."

"நீங்கள் நன்றாக இருந்தால் நான் நன்றாக இல்லாமல் ருப்பேனா?"

"பாப்பா படி

அப்படிப்பு எப்படிப்பு?

"தேர்வு முடிந்தது; இனியேன் படிப்பு?"

"இன்னும் தேர்வு வருமே;"

"அப்போது படிக்கலாமே!"

"மாமா படிக்கிறார் பார்!"

"மாமா படிப்பது வேலைக்கு: வேலை கிடைத்து விட்டால் அவருக்கும் படிப்புக் கிடையாது!"

"அப்பா படிக்கவில்லையா?”

"கூட்டத்தில் பேசப் போகிறாராம்;

அதற்காகப்

படிக்கிறார்; நேற்றுப் படிக்கவா செய்தார்? நாளைப் படிக்கவா செய்வார்?"

"தாத்தாவைப் பார், படியாமல் என்றாவது இருக்கிறாரா?

"ஆமாம்! ஆமாம்! தாத்தாவுக்குத் தேர்வு இல்லை; ஆனாலும் படிக்கிறார்.”

தாத்தாவுக்கு வேலைத் தேர்வும் இல்லை!