உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

வேலையில் இருந்து ஓய்வும் பெற்று விட்டார்.

தாத்தாவுக்குக் கூட்டத்தில் பேச வேண்டியதும் இல்லை. வீட்டை விட்டு வெளியே போகவே மாட்டார்!

ஆனால் என்றும் படிக்கிறார்; எப்பொழுதும் படிக்கிறார்? "பாப்பா, எதற்காகப் படிக்க வேண்டுமோ அதற்காகவே படிக்கிறார் தாத்தா!"

எவர்க்காகப் படிக்க வேண்டுமோ, அவர்க்காகவே

படிக்கிறார்.

அதனால், ஓயாது படிக்கிறார்; ஒழியாமல் படிக்கிறார். அதுதான் சரி; எதற்காகப் படிக்க வேண்டுமோ, அதற்காகப் படிப்பேன்;

எவர்க்காகப் படிக்க வேண்டுமோ, அவர்க்காகப் படிப்பேன். இனி எனக்கு ஏவ வேண்டுவதும் இல்லை! தூண்ட வேண்டியதும் இல்லை!

'நீ மட்டுமா? உன்னோடு நானும் கூட்டாளியாவேனே'

அவரவர் பாடு அவரவர்க்கு

வீட்டுத் தளத்தின் வேலை நடக்கிறது.

சிற்றாள் சிமிண்டு (கன்மா)க் கலவைத் தட்டைத் திட்டுத் ன வைக்கிறான்; தளத்தில் இழுக்கிறான்.

கொத்தனார்: "தளத்தில் திட்டுத் திட்டென்று தட்டை

வைக்காதே; இழுக்காதே."

வீட்டுக்காரர் : ஆம்! வைக்காதே; இழுக்காதே!

கொத்தனார்: 'தட்டு' கெட்டுப் போகும்!

வீட்டுக்காரர் : 'தளம்' கெட்டுப் போகும்!

அவரவர் பாடு எப்படி அருமையாக வெளியாகின்றது! 'நிலை' ஒன்றுதான்; 'நினைப்பில்' எவ்வளவு தன்னல வேற்றுமை?