உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

தந்தது

69

"அம்மா, உங்களுக்குக் கொஞ்சமாவது நன்றி இருக்கிறதா? ஒரு நல்ல சொல்லாவது உங்களிடம் உண்டா?"

நன்றி எனக்கா இல்லை? நல்ல சொல் நான் சொல்லவா இல்லை?'

66

"ஆம்! ஆம்! நான் உணவு தருகிறேன்; உடை தருகிறேன்; வேண்டும் உதவிகள் செய்கிறேன்; மருத்துவம் பார்க்கிறேன்;"

இவ்வளவு தந்தும்...

"அடே அடே! என்னென்னவோ எனக்குத் தந்ததாகச் சொல்கிறாயே! அந்தப் பட்டியல் எல்லாம் எனக்கு வேண்டியது இல்லை! உன்னைத் தந்தவளே நான் இல்லையாடா? நான் தராமல் எப்படியடா நீ இவற்றைத் தந்தாய்?'

மக்களே போல்வர்

பொய்யன்வாய், புழுத்துக் கிடக்கும்;

திருடன் வாய், தீய்ந்து போயிருக்கும்;

வஞ்சன் நெஞ்சு, கரிந்திருக்கும்;

பொறாமையன் கண், இடுங்கிக் கிடக்கும்;

ஒழுக்கமற்றவன் நெற்றியில், கட்டியிருக்கும்;

கையூட்டான் கலப்படத்தான் கைகள், நான்காய், விரல்கள், ஆறாய் ஏழாய் இருக்கும்

- என்றால் எளிதாய் இவரெனக் கண்டு கொள்ளலாம்.

அவ்வாறு எளிதாகக் காண முடியாமையால்தான், "மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாங்கண்டதில்"

என்றார் திருவள்ளுவர்.