உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

இக்கூட்டத்திற்குக் 'கடப்புச் சீட்டு' உண்டா?

'புகவுச் சீட்டு' உண்டா?

தணிக்கைக் கட்டுப்பாடு உண்டா?

71

நினைத்த அளவில் வந்து நினைத்த அளவில் போகின்

றனவே?

இவற்றை எந்நாடும் தடுக்காமை ஏன்?

பறவைகள் குண்டு போட வருவதில்லை.

உளவு பார்க்க வருவதில்லை.

கொள்ளை கொண்டு போக வருவதில்லை.

போர்ப் பயிற்சி பெறவோ, தரவோ, கடத்திக் கொண்டு போகவோ வருவதில்லை.

கரவற்ற அவை, உறவாடி உவக்க வருகின்றன; போகின்றன. மாந்தனுக்கு ஏன் இவ்வளவு கட்டுகள் நாட்டுக்கு நாடு! அவன் நெஞ்சு, நெஞ்சாக இல்லாமல், நஞ்சாகி விட்டால்தானே.

கிளியே,

குறுமனம்

இலையை - தளிரை

காயை

-

கனியை

க் 'கிள்ளி'

எடுக்கும் கிள்ளியே, நீ அவற்றை மட்டும்தானா எடுக்கிறாய்?

என் உள்ளத்தையும் கிள்ளும் கள்ளி அல்லவோ நீ!

தத்தித் தத்திச் செல்லும் தத்தையே,

அப்படி என்ன வேலை தத்திச் செல்வதற்கு?

அலுவலா அல்லது அச்சமா?

கிள்ளி

வானவில்லை ஒவ்வொரு வேளை பார்க்கலாம்; அரை குறையாகவே பெரிதும் பார்க்கலாம்.

ஆனால் வானவில்லை நாண வைக்கும் வண்ண

வில்லியே!