உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

“எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டா துலகு'

என்பது திருக்குறள் (670).

செருக்கறுத்தல்

22

89

இறுக்கம் இரத்தினர், புதுவை வேலர் ஆகியவர்களைப் பற்றி முன்னரே கண்டுள்ளோம். அவர்கள் வள்ளலாரிடம் மன்றாடியும், உண்ணாநோன்பு இருந்தும் வள்ளலார் உள்ளத்தை உருக்கி அவ்வுருக்கத்தாலேயே வள்ளலார் பாடிய திருவருட் பாவை நூல் வடிவில் வெளியிட ஒப்புதல் பெற்றவர்கள். அந்நூல் பணியை மேற்கொண்டவர் தொழுவூர் வேலாயுதர். நூலில், திருவருட்பா வரலாறு என்பதொன்றைத் தொழுவூரார் பாடிச் சேர்த்தார். அதில் வள்ளலாரைத் 'திருவருட் பிரகாச வள்ளலார்' என்று குறிப்பிட்டிருந்ததையும் அதன் விளக்கத்தையும் 'இராமலிங்க சுவாமிகள்' என்னும் பெயரைப் பற்றிய செய்தியையும் கடிதப் பகுதியில் குறித்துள்ளோம்.

இவை "பெருமை பெருமிதம் இன்மை" (979) என்பதை விளக்குவதுடன்,

"யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும்" (346)

என்பதையும் விளக்குவன.

யான் என்பது செருக்கு; எனது என்பதும் பற்றுவழி வரும் செருக்கே. தற்செருக்கும், தற்பொருட் செருக்கும் அற்ற வள்ளலார் - மெய்ப்பொருள் உணர்ந்த வள்ளலார்-போலிப் பொய்ச் செருக்குகளில் நாட்டம் செலுத்துவார் என எண்ண முடியுமா?

உடலையும் வெளிப்படக் காட்ட விரும்பாதவர், கை வீசி நடத்தலையும் கருதாதவர், காட்டுயர் அணை மேல் கால்மேல் கால் போட்டு இருக்கவும் துணியாதவர் வாழ்வில் செருக்குக்கு டமேது?

'வள்ளலார் கடிதங்களும் திருக்குறளும்' என்பதிலுள்ள 'ஆரவாரம்' என்னும் பகுதி இதனுடன் எண்ணத்தக்கது.

செருக்கைச் சினந்து பாடுகிறார் வள்ளலார்: