உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

66

இளங்குமரனார் தமிழ்வளம்

“கலையறியாச் சித்தமெனும் கனமோசப் பயலே

34

காலறியாய் தலையறியாய் காண்பனகண் டறியாய் நிலையறியாய் ஒன்றையொன்றாய் நிச்சயித்திவ் வுலகை நெறிமயங்க மயக்குகின்றாய் நீயோஇங் குறுவாய்

என்று அதனியல் உரைத்து,

“அலையறியாக் கடல்போலே அசைவறநின் றிடுநீ

அசைவாயேல் அரைக்கணத்தே அடக்கிடுவேன் உனைத்தான் அலைவறிவாய் என்றனைநீ அறிவாயோ நான்தான்

ஆண்டவன்தன் தாண்டவம்கண் டமர்ந்தபிள்ளை காணே”

என்று செருக்கை வெற்றி கொண்ட நிலையையும் தம் தகுதியையும் உரைக்கிறார். வள்ளலாரிடம் செருக்குக்கு என்ன வேலை? உயிர்ப்பலி விலக்கு

வேட்டவலம் குறுநில மன்னர் அப்பாசாமிப் பண்டாரியார். அவர் துணைவியாரை வருத்திவந்த தீரா நோயைத் தீர்த்தார் வள்ளலார். அதற்காக மகிழ்ந்த அப்பாசாமியார், வள்ளலார்க்கு அடிமை பூண்டு நின்றார். முழுச் செல்வத்தையும் வள்ளலார்க்கு வழங்கவும் எண்ணினார். வள்ளலார் உள்ளம் பொருள் உள்ளமோ? அருள் உள்ளம்! ஆதலால் இரண்டு கட்டளைகளை இட்டார்:

"அவ்வூர்க் காளிகோயிலில் நடைபெற்று வரும் உயிர்ப் பலியை நிறுத்த வேண்டும்." "ஊருள் உள்ள நச்சுயிரிகளைப் பிடாரன் ஒருவனைக் கொண்டு பிடித்துக் காட்டுக்குக் கொண்டு போய் விடவேண்டும்.

""

அவரைத் தேடிவந்தது உதவி; கேட்டு வரவில்லை. அதனை உயிரிரக்கத் தொண்டுக்கே உரிமைப்படுத்திவிடுகிறார் வள்ளலார். அதனால்தான் அருளாளர் ஆனார்! வள்ளலார் ஆனார்! "அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை என்னும் முழக்கத்தின் மூலவர் ஆனார்.

""

கோயில்களுக்கு உயிர்ப்பலியூட்டல், சட்டத்தாலே அந்நாள் தடுக்கப்பட்டுள்ளது. அந்நாளில் சிறு தெய்வ வழிபாட்டிடங் களில் எல்லாம் உயிர்ப்பலி யூட்டல் தடுப்பாரின்றி நடந்து கொண்டு வந்தது. வள்ளலார் முழக்கமிட்டார்; உரையில் வேண்டினார்; செய்யுளிலும் வேண்டினார்; நேரிடையில் தலைப்பட்டுச் செயன்முறையிலும் தடுத்து நின்றார். வள்ளுவர் நெறி அது.