உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

91

அவிசொரிந் தாயிரம் வேட்டலினும் கொல்லாமை நெறி சிறந்ததெனப் பறையறைந்தவர் அவர். அந்நாளில் நிகழ்ந்த கொலை வேள்வியைக் கண்டித்தது அவர் நெறி.

"அறவினை யாதெனில் கொல்லாமை", "ஒன்றாக நல்லது கொல்லாமை"

“தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது) இன்னுயிர் நீக்கும் வினை"

என்றெல்லாம் குறித்தார்.

உயிர்ப்பலியை நிறுத்தும் அளவில் மட்டுமோ வள்ளலார் அமைந்தார் அல்லர். பாம்புக்கும் அருள் பாலிப்பவராய்ப் பிடாரனைக் கொண்டு பாம்பைப் பற்றிக் காட்டில் விடுமாறு கட்டளையிடுகிறார். இக்கட்டளை வள்ளுவரின் கொல்லாமை, இன்னா செய்யாமை என்பவற்றின் சாரமாம்.

"நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப் பலிதர ஆடுபன்றிகுக் குடங்கள்

பலிகடா முதலிய உயிரைப்

பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே

புந்திநொந் துளம்நடுக் குற்றேன் கலியுறு சிறிய தெய்வவெங் கோயில்

கண்டகா லத்தினும் பயந்தேன்'

>>

காணத்தக்கது.

எனவரும் பாடல் இவண் இணைத்துக் காண

உணர்ச்சி நட்பு

பிசிராந்தையார் கோப் பெருஞ்சோழன் நட்பு, பழ நாளிலேயே பாடு புகழ் மிக்கது. ஒருவரை ஒருவர் பாராமலேயே கேள்வி அளவானையே - உள்ளார்ந்த நட்புக் கொண்டிருந்தனர். அதனை 'உணர்ச்சி நட்பு' என்பர்; இயல்பாகப் பழகி அதனால் உண்டாம் நட்பைப் 'புணர்ச்சி நட்பு' எட்பர். வள்ளுவர்,

“புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்”

என்றதற்கு அவர்கள் நட்பை எடுத்துக் காட்டாகக் காட்டுதல் வழக்காயிற்று. அத்தகு நிலையில் வள்ளலார் வாழ்விலும் ஒருநிகழ்ச்சி நிகழ்ந்துள்ளது. அதிலும் ஒரு சிறப்பு, 'இப்பொழுது