உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 349

வருவார்' என்று குறித்தபோதிலே பிசிராந்தையார் கோப் பெருஞ்சோழனிடம் வந்தது போலவே, வள்ளலார் வந்தெய்தினார் என்பதாம்.

திருநறுங்குன்றம் சார்ந்தவர் கல்பட்டு ஐயா என்பார். அவர் ஓகப்பயிற்சியர். தம்மை மெய்க்குருவர் ஒருவர் இன்ன மாதம், இன்ன நாள், இன்னநேரம் வந்து ஆட்கொள்வார் என்றுதாம் உணர்ந்தபடி பலர்க்கும் கூறியிருந்தார். அவர் கூறியவாறே பலருங்கூடி எதிர்பார்த்திருந்த நிலையிலே வள்ளலார் ஆங்கு வந்து அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சி உணர்ச்சி நட்பை மெய்ப்பிப்பதாயிற்று. கல்பட்டு ஐயா வடலூர்க்கு வந்து தங்கியிருந்து செய்த அருட்பணிகள் மிகப் பலவாம். வள்ளலார் உள்ளம் அறிந்த அவர் செய்துள்ள தொண்டுகள் வடலூர் வரலாற்றில் நிலைப்புடையவையாம். உணர்ச்சி நட்பை அகப்புணர்ச்சி நட்பென வள்ளலார் வழங்குதல் பாடல் பகுதியில் கண்டதே.

விருந்தின் சிறப்பு

ஊற்றங்கால் மங்கலம் என்னும் ஊரில் வாழ்ந்தவர் கேசவரெட்டியார் என்பார். அவர் வள்ளலார் மேல் மட்டற்ற அன்பர்; அவ்வன்பர், வள்ளலார் தம் இல்லத்திற்கு வந்து விருந்துண்ணும் பேறு தமக்கு வாய்க்க வேண்டும் என்னும் பெருவிருப்புடையவராக இருந்தார். விருந்துக்குச் செல்லும் இச்சை வள்ளலாருக்குத் துளியளவும் இல்லை. அதே பொழுதில் அன்பர் விருப்பத்தை நிறைவேற்றா திருக்கவும் உளமொப்ப வில்லை. அதனால் கேசவர் எதிர்பாராத ஒருவேளையில் அவர் வீட்டிற்கு வள்ளலார் சென்றார். "உம் விருப்பப்படி விருந்துண்ண வந்தோம்" என்றார். அப்பொழுது இல்லத்தில் இயல்பாக இருந்த உணவை உண்டு மகிழ்ந்தார்.வள்ளலார் வந்தபேறே பேறு எனக் கொண்ட கேசவரும் இனிது மகிழ்ந்தார். உணவில் என்ன இருக்கிறது? உணவை உட்கொண்டவர் தன்மையல்லவோ எண்ணத் தக்கது!

tr

"இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்'

என்பது திருக்குறள் (67). விருந்தின் சிறப்பு சிறப்பன்று விருந் துண்டார் சிறப்பே சிறப்பு என்னும் இக்குறளின் செவ்விய சான்றாகக் கேசவர் தந்தவிருந்தைப் பெருமைப் படுத்திவிட்டாரே வள்ளலார்.