உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்குவ காலம்

வள்ளுவர் வழியில் வள்ளலார்

93

உடலை உறுதிப்படுத்த வல்ல ஊட்ட மருந்தொன்று வேண்டும் எனச் சாலை அன்பர்கள் சிலர் வேண்டினர். அதற்கு வள்ளலார் சேங்கொட்டையை இடித்து உரமாக இட்டு அதில் பொற்றலைக் கையாந்தகரை நடச்செய்தார்; அதனை ஆடுமாடு தின்றுவிடாவாறு போற்றிக் காக்கக் கட்டளையிட்டார். பின்னர் கருங்குழிக்குச் சென்று சில நாள்களின் பின்னர் திரும்பினார்.

கட்டார்ந்த உடல்நிலை பெறுவதற்கு விரும்பிய அன்பர்கள்,

வள்ளலார் பேணிக் காக்குமாறு கட்டளையிட்ட கையாந்தகரை மேல் கருத்திலர் ஆயினர். அவர் கருத்தெல்லாம் சீட்டு என்னும் சூதாட்டத்தில் புகுந்தது. அதிலேயே பொழுது போக்கினர். காப்பில்லாக் கையாந்தகரை ஆடுமாடுகளால் தின்னப்பட்டு அழிந்தது.செயலை அறிந்தார். என் செய்வார்? ஒன்று கூறினார்: உங்களுக்குப் பக்குவம் வரும் காலம் பக்கத்தில் இல்லை" என்பதே அது.

மெய்யுணர்விலும் தம்மை மறந்து இன்புறலாம்.சூதென்னும் பொய்யுணர்விலும் தம்மை மறந்து இன்புறலாம். முன்னை இன்பம் உய்தி இன்பம்; பின்னை இன்பம் அழிவு இன்பம். பின்னதை நாடிப் பொழுதைப் போக்கியவர்கள் முன்னதை எப்படி நாடுவர்? அதனால் இவ்வாறு கூறினார்.

வள்ளுவர் உரைத்தார்:

"உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும்" (933)

சூதில் ஓயாது ஈடுபட்டனர்; உடல் வளர்க்கும் உயரூட்டப் பொருளை இழந்தனர். பொருளிழப்பில் பெரிதன்றோ இவ்விழப்பு?

செல்லும் வாய் நோக்கிச் செயல்

மேட்டுக்குப்பத்தில் அடிகளார் அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார். கூட்டத்திற்கு எங்கெங்கிருந்தோ மக்கள் வந்து பெருகியிருந்தனர். அவர்கள் அமர்ந்து கேட்டற்குரிய இடம் பருக்கைக் கற்கள் நிரம்பியதாக இருந்தது. அக்கற்கள் அவர்களை உறுத்தும் என்னும் உறுத்துதல் வள்ளலார்க்கு உண்டாயிற்று. அதனால் மணல் கொணர்ந்து பரப்பினால் அமர்ந்து கேட்க வாய்ப்பாம் என எடுத்துரைத்தார். அதனைப் பொருட்டாக எண்ணாமல் வள்ளலார் அருள்மொழி கேட்பதிலேயே ஆர்வம்