உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

கொண்டிருந்தனர். ஆதலால் அவர்களுக்கு அக்கல்லுறுத்தல் பொருட்டாகத் தோன்றவில்லை. ஆனால் வள்ளலார் உள்ளத் திற்கு அஃதேற்கவில்லை. அத்துயரைப் போக்க எண்ணினார்.

மழைநீரால் அரிக்கப்பட்டுப் பரவிக்கிடந்த மணல் பகுதியை நோக்கி வள்ளலார் ஒருநாள் மாலைப்பொழுதில் நடந்தார். அங்கே கிடந்த மணலைப் பரசித் தம்கையில் கொண்டு சென்ற துணியில் அள்ளிக் கொண்டு திரும்பினார். அதைக் கண்ட அனைவரும் தத்தம் துண்டு துணி ஆகியவற்றில் மணலை அள்ளி வாரினர்! பட்டு பஞ்சு என வேறுபாடு இன்றி அனைவரும் மணல் சுமந்தனர். சொற்பொழிவு நிகழும் வன்கற்பரப்பு நன்மணற் பரப்பாகியது. வள்ளலார் உள்ளம் உள்ளம் உவகையுற்றது. அதே பொழுதில் வள்ளலார் உலகியல் அறிவுத் திறமும் புலப்பட்டது. “ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும் வாய்நோக்கிச் செயல்” (673)

என்பது வள்ளுவர் வாக்கு, ஒல்லும்வாய் உரைத்தார் வள்ளலார். அஃதொல்லா நிலையில் செல்லும்வாய் நோக்கிச் செயல்பட்டார். செயல் இனிது நிறைந்தது; குறள் நெறியும் சிறந்தது.

முதற்றே

திருக்குறளின் சொற் சுருக்கம், பொருட் பெருக்கம் ஆகியவை அறிந்தது. அதனைக் கருதியே திருக்குறளைக் கடுகுக்கும் அணுவுக்கும் உவமை காட்டித் திருவள்ளுவ மாலை பாடியது. அத்தகு குறளின் முதற்பாடலாம்

66

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு'

""

என்பதில் வரும் 'முதற்றே' என்னும் சொல்லில் 'ஏ' என்னும் அசைநிலை உள்ளது. "அசைநிலை என்பது பொருள் கருதாமல் ஓசை கருதி வருவதுதானே; இது திருக்குறளின் நிலைக்குத் தகுமா?" என ஒரு புலவர் ஐயங் கொண்டார். அவ்வையத்தை வள்ளலாரிடம் வந்து எழுப்பினார்.

வள்ளலார் சுற்றாமல் வளைக்காமல் எளிமையாக 'முதற்றே' என்பதை 'முதல் தே' (தே-தெய்வம்) எனப் பிரித்துக் கொண்டால் வரும் குற்றமென்ன என்று மறு மொழியுரைத்துக் கேட்டவரை வியப்பில் ஆழ்த்தினார். அசைநிலைக்கும் பொருளுண்டு என்பதை திருக்குறள் மெய்ப்பிக்கும் எனினும், வள்ளலார் தந்த பொருள் விளக்கம் கேட்டவரை ஆட்கொள்வதாயிற்று.