உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

உயிர்தளிர்ப்பத் தீண்டல்

95

உள்ளார்ந்த அன்புடையாரைத் தழுவுதலால் உயிர் தளிர்க்கும் என்பார் திருவள்ளுவர். இன்பத்துப்பால் புணர்ச்சி மகிழ்தலில் 'உயிர்த் தளிர்ப்பத் தீண்டலை' எடுத்துரைக்கும் வள்ளுவர் அவ்வினிய தோளை அமிழ்தான் அமைந்தது என்றும் கூறுவார் (1106). அக்காதற் காட்சி அன்புக் காட்சியாய் - அடியார் காட்சியாய் - வள்ளலார் வாழ்வில் மடைமாற்றமாகிச் சிறத்தல் அறியப்படுகின்றது.

நாராயண ரெட்டியார் என்பார் கட்டமுத்துப் பாளையம் என்னும் ஊரைச் சார்ந்தவர். அவர் அடிகளார் மேல் அளவிறந்த அன்பராய் அவர் தம் கொள்கையில் அழுந்தியவராய் இருந்தவர். அடிகளார் திருவுடலைத் தொட்டு இன்பங் காணின் அவ்வின்பம் எத்தகைத்தாக இருக்கும் எனத் தம்முள் விரும்பியிருந்தவர். ஒரு நாள், வழிபாட்டின்போது ஓரமாக நின்றஅவரை அடிகளார் அருகில் சென்று கையைப் பற்றி 'ஒளி வழிபாடு செய்க' எனத் திரு முன்பில் நிறுத்தினார். அவர் பெற்ற இன்பம் எல்லையற்ற தாயிற்று. தம்மைப் பொருட்டாக எண்ணித் தழுவிக் கொண்ட அடிகளார் விரும்பும் திருப்பணிக்கே தம்மை முழுதாக ஒப்படைத்து வடலூரில் வாழ்ந்தார். கல்பட்டு ஐயா இராமலிங் கருக்குப் பின்னே அறச்சாலைகளைக் கண்ணும் கருத்துமாக நடத்தி வந்தார். தம் கையை அடிகளார் தொட்டழைத்த அருமையை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்தார். பலரிடமும் வனைந்து வனைந்து உரைத்துப் போற்றினார். அவர்தம் வாழ்வு அருள் தொண்டுக்கென நீண்டமைந்து, "உயிர் தளிர்ப்பச்" செய்வதாய் இலங்கியது.

நோற்றலின் ஆற்றல்

நோற்றல் என்பது என்ன? தாங்குதல், பொறுத்தல் என்பதே நோற்றல் பொருள். துன்பத்தைத் தாங்கித் தாங்கி உரம் பெற்று விட்டால் கூற்றம் என்பது என் செய்யும்? அஞ்சுவார்க்குத் தானே சாவு! அஞ்சாதாரை, அச்சுறுத்த வந்த கூற்றுக்குத்தானே தோல்வி.

"உற்ற நோய் நோன்றல்", "துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்', 'கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு" என்னும் தவக்குறள்களை எண்ணினால் வள்ளலார் இறுதிநிலை வெளிப்படும்.