உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

34 ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் -34

கூற்றம் என்பது என்ன? உடலையும் உயிரையும் கூறு படுத்தும் (பிரிக்கும்) இயற்கை நியதி. இதற்கு அஞ்சுவார் எவர்? இயற்கை நுட்பம் அறியார் அஞ்சுவர். நுட்பமுணர்ந்த வள்ளுவர், உறங்குவது போலும் சாக்காடு' எனப் பேருறக்கம் பறப்பது போல, உடற்கூட்டில் இருந்து உயிர்ப்பறவை பறக்கிறது என்றார்!

நல்லுறக்கம் - தன்னை மறந்த பேருறக்கம் வரும்போது 'ஐயோ! உறக்கம் வருகிறதே' என அலறுவார் அறிவுடையரோ! அப்படி எண்ணினால் இறப்புப் பற்றிய அச்சமுண்டாகுமா? கூற்றம் தோற்றுப் புறங்காட்டி ஓடும் நோன்பு வாழ்வை வள்ளுவர் காட்டினார்! படுக்கை அறைக்குள் முழுதுறும் உறக்கம் உறங்கப் போவார் போல ஒளிவு மறைவு இன்றி ஊரறியச் சொல்லிச் சித்திவளாகப் பெருமாளிகைக்குள் புகுந்தார்! அவர் புகவு "கூற்றையும் ஆடல் கொண்ட வாழ்வு" என்பதை வெட்டவெளி ஆக்கிற்று.

'சமரச சன்மார்க்கம் பெற்றேன்; இங்கு இறவாமை உற்றேன்"

என்பது அனுபவமாலை.

இதன் மேல்விளக்கம் அடுத்து வரும் பகுதியில் உள்ள சித்திவளாகத்துக் காண்க.