உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

-

இளங்குமரனார் தமிழ்வளம் 34ஓ

என்பவற்றை எண்ணினால் இனத்தின் சிறப்பு இனிது விளங்கும். இந்நல்லினக் கூட்டுக் கருதியே அடிகளார் சன்மார்க்க சங்கம் கண்டார் என்க. சங்கம் என்பது நல்லோர் அவையம் தானே! அறிவாளர் அவையம் தானே!

அருணிலையம்

-

சாலை

சங்கம் அறிவமைப்பு; பிறர்க்கு உதவா அறிவின் பயன் என்ன? இல்லை என்பதால் அறிவுப் பயனாம் பிறர்க்குதவும் பேரருள் நிலையமாகத் தருமச்சாலை கண்டார் வள்ளலார். அதன் திறப்பு நாள் அன்றே, பசிப்பிணி தீர்த்த பான்மை விளக்கமாகின்றது:

tt

கூடலூர் சார்ந்த துரைசாமி என்பார் "அன்னதானத்திற்கு மூன்று வண்டி நெல்லும் ஒரு வண்டி காய்கறியும் ஆக நாலு வண்டி தயாராகும் எனக் குறிப்பிடுகிறார். மு.அப்பாசாமி செட்டி என்பார் (சாலை) துவக்கும்போது மூவாயிரம் சனங்களுக்குக் குறையாமல் கூடுமென்று தோன்றுகின்றது. ஆகையால், அத்தினத்தில் செல்லுகின்ற செலவு முழுவதும் இந்தத் தருமச்சாலையை அபிமானித்த நாமனைவரும் பாகம் செய்து கொண்டு செலுத்துவோமாக" எனச் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

"பசித்து வருபவர்களுக்கு, சாதி சமய மத சாத்திர கோத்திர உயர்வு தாழ்வு நோக்காது 'எப்போதும் சாலையில் அடுப்புப் புகைந்து கொண்டே இருக்க வேண்டும்' என்று வள்ளற்பெருமான் கட்டளையிட்டருளிய வண்ணம் பசியாற்றப் பட்டு வருகின்றது" என்கிறது திருவருட்பிரகாச வள்ளலார் திவ்விய சரித்திரம் (59-60).

ச்சாலைப்பணி வள்ளுவர் உள்ளங்கவர் பணியென எளிதில் அறியலாமே.

66

"ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்”

என்பது திருக்குறள்.

"ஆற்றலுள் எல்லாம் உயர்ந்த ஆற்றலாவது பசியைப் பொறுக்கும் ஆற்றல். அவ்வாற்றலினும் பேராற்றல் அவ்வாறு பசித்தார் பசியை உணவு தந்து மாற்றும் ஆற்றலாம்" என்னும்

து, உணவுக் கொடை, தவத்தினும் உயர்ந்த தென்பதைக் காட்டும். ஏனெனில், தவம் என்றது, "உற்றநோய் நோன்றல்;