உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

99

உயிர்க்கு உறுகண் செய்யாமை" யாம் தகைமைகளே.இப் பசியாற்றும் செய்கையோ, பிற உயிர்கள் ஆற்றாமல் தவிக்கும் பசிப் பிணியை மாற்றும் அமுதாம் மருந்து வழங்குவதாக இருத்தலால் என்க.

இனி வள்ளுவர்,

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை'

என்றார்.

55

நூல்வல்லார் காலமெல்லாம் ஆய்ந்து கண்ட கருத்துக்கள் எல்லாவற்றுள்ளும் தலைமையானது, தமக்கு வாய்த்த உணவைத் தாமே யுண்டமையாது, பலப்பல உயிர்களுக்கும் பகுத்துத் தந்து பசிதீர்க்கும் பான்மையேயாம் என்பது இக்குறளின் பொருளாம்

என்க.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் அருள் தளத்தின் மேல் எழுப்பப்பட்ட ஆக்கமிக்க மாளிகையே தருமசாலை என்க.

மெய்விளக்கம் சபை

வள்ளலார் நிறுவிய மற்றொரு நிறுவனம் சத்திய ஞானசபை. அது சங்கஞ் சார்ந்த திருக்கோயிலாகும். சத்திய ஞான சபையின் செயற்பாட்டை "சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கம் செய்கின்ற ஞானசபை என்கிறார் வள்ளலார். சபை தோன்றிய காலம் 1871.

வள்ளலார் சத்திய ஞானசபையை எங்கே கண்டார்? "ஊனுடம் பாலயம்”, “உள்ளம் திருக்கோயில்" என்று மெய்யுணர் வாளர் உரைப்பரே! அப்படிக் கண்டார்.

“சத்திய ஞானசபை என்னுட் கண்டனன்

சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டேன்”

என்கிறார் வள்ளலார். தம் உள்ளத்துக் கண்ட சபையை, உலகோர்க்காக வடலூர் வெளியிலே கண்டார். "சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை யறிவு உண்மையன்பு உண்மையிரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெற்று நற்செய்கையுடையராய், எல்லாச் சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப்